சுடச்சுட

  

  துணைத் தேர்வு: தத்கல் திட்டத்தில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

  By  புதுச்சேரி,  |   Published on : 14th September 2016 11:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  exam

  நடைபெறவுள்ள செப்டம்பர், அக்டோபர் மேல்நிலை துணைத் தேர்வுக்கு தத்கல் திட்டம் மூலம் ஆன்லைனில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என இணை இயக்குநர் ஜெ.கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.
   அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து தத்கல் திட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
   தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் முகவரியில் இயங்கும் சிறப்பு மையத்துக்கு வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் மட்டும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பதாரர் நேரில் வந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் கணினி மையம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாது. தேர்வுத் துறை சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான சேவை மையம், மேல்நிலைக்கல்வி தேர்வு பிரிவு, நான்காம் தளம், பள்ளிக் கல்வி இயக்ககம், அண்ணா நகர், புதுச்சேரி-5. விண்ணப்பிக்க விரும்புவோர் எச் வகையினர், ஒரு பாடத்துக்கு ரூ.50 மற்றும் இதர கட்டணம் ரூ.35 சேர்த்து ரூ.85-ம், எச்.பி. வகையினர் அனைத்துப் பாடங்களுக்கும் ரூ.150 மற்றும் இதர கட்டணம் ரூ.37 என ரூ.187 தேர்வுக் கட்டணத்துடன் ரூ.1000 சிறப்பு அனுமதிக் கட்டணம், மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50-ஐ பணமாக செலுத்த வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai