சுடச்சுட

    

    நகராட்சியில் இணைத்த ஊராட்சிகளை மீண்டும் ஒன்றியத்தில் சேர்க்கக் கோரிக்கை

    By விழுப்புரம்,  |   Published on : 14th September 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் நகராட்சியில் சேர்ந்து பயனின்றி தொடரும் ஊராட்சிகளை மீண்டும் ஒன்றியப் பகுதியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
     இதுகுறித்து, பாஜக விழுப்புரம் மாவட்ட பொதுச் செயலர் வெ.சுகுமார் உள்ளிட்டோர், தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
     விழுப்புரம் நகராட்சியில், அருகே உள்ள கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 5 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டன.
     இதனால், கிராமத்தினருக்கு எந்தப் பயனும் இதுவரை இல்லை. மாறாக, ஊரக வேலைத் திட்டம் ரத்து போன்ற இழப்புகள் தான் உள்ளன. இணைக்கப்பட்ட கிராமப் பகுதிகளில், நகராட்சியின் குடிநீர், கழிவுநீர், குப்பைத் தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் அறவே செய்யப்படாமல் உள்ளது.
     பெரிய நிலப்பரப்பை உடைய, அதே நேரத்தில் மக்கள்தொகை குறைந்த பாணாம்பட்டு, எருமனந்தாங்கல், காகுப்பம்
     கிராமப் பகுதிகளை மீண்டும் கோலியனூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இணைக்க வேண்டும்.
     இதனால், கிராமத்தில் உள்ள ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு கடன் மானியத் திட்டங்களும், ஊரக வேலைப் பணியும் கிடைத்து பயன்பெறுவார்கள். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாக செயலர் உள்ளிட்டோருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்து, கிராம மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai