சுடச்சுட

    

    செஞ்சி-விழுப்புரம் சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சிலர் ஆக்கிரமித்து கடை விரித்துள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
     செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் மற்றும் இப்பகுதி வழியாக ஜெயங்கொண்டான், சொரத்தூர், அணிலாடி, மாம்பட்டு, கல்லாலிப்பட்டு, எம்.ஜி.ஆர். நகர், அப்பம்பட்டு, அனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பயணிகள் இந்த நிழற்குடையில் பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம்.
     இந்த நிழற்குடையில் நரிக்குறவ இன மக்கள் ஊசி, மணி, வளையல், சீப்பு, சோப்பு, கண்ணாடி மற்றும் விளையாட்டுப் பொருள்களை பரப்பி, கடந்த சில வாரங்களாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இதனால், பயணிகள் நிழற்குடையில் உள்ள இருக்கைகளில் அமர முடியாமலும், நிற்க முடியாமலும் தவிக்கின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai