சுடச்சுட

  

  பக்ரீத்: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

  By விழுப்புரம்,  |   Published on : 14th September 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
   முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
   விழுப்புரம் மாவட்டத்தில், முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு கொண்டாடினர்.
   விழுப்புரம் மந்தக்கரையில் உள்ள சிங்கபூரான் திடலில் காலை 7.30 மணிக்குத் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கீழ்ப்பெரும்பாக்கம் எம்டிஜெ பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 400 பேர் வரை கலந்துகொண்டனர்.
   விக்கிரவாண்டி கபார்கான் சுன்னத்ஜமாஅத் பகுதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 600 பேர் வரை கலந்துகொண்டனர்.
   காணை அபுபக்கர் சித்திக் பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
   செஞ்சி: செஞ்சி பெரிய பள்ளிவாசலில் 2,000க்கும் மேற்பட்டோர் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர். கொத்தமங்கலம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் 1000 பேர் பங்கேற்றனர். செஞ்சிக்கோட்டையில் உள்ள சாதத்துல்லாகான் மசூதியில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
   முன்னதாக, செஞ்சி சத்திரத் தெரு பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்தவர்கள், செஞ்சி கூட்டுச் சாலையில் செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத்மஜீத்பாபு பிறை கொடியை ஏற்றினார்.
   பின்னர், அங்கிருந்து புறப்பட்டு செஞ்சிக்கோட்டையில் உள்ள சாதத்துல்லாகான் மசூதியில் சிறப்புத் தொழுகை நடத்தினர்.தொழுகையை ஷமீம் அக்தர் நடத்தி வைத்தார்.
   இதில், மருத்துவர் சையத்சத்தார், அப்துல்சலாம், சையத்பாபு, பள்ளி வாசல் தலைவர்கள் முனீர்பாஷா, அலீம்குரைஷி, அன்சர், முபாரக் அலி, முகமதுஅஷ்ரப், சர்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   திண்டிவனம்: திண்டிவனம் ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் நடந்த தொழுகையில் 5000 பேர் கலந்துகொண்டனர்.
   கோட்டக்குப்பம் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில் 5,000 பேர் கலந்துகொண்டனர்.
   திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரகண்டநல்லூர், மணலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டது.
   உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் உள்ள ஜாமியா மஜ்ஜித் பள்ளிவாசல், திருவெண்ணெய்நல்லூர் சாலையில் உள்ள பள்ளிவாசல், கந்தசாமிபுரம் பகுதியில் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
   இதேபோல, வெள்ளையூர், குணமங்கலம், எலவனாசூர்கோட்டை, களமருதூர், பரிக்கல், ஷேக் உசேன்பேட்டை, மூலசமுத்திரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
   மாவட்டம் முழுவதும், 25க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற தொழுகையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
   முஸ்லிம் மக்கள் புத்தாடை அணிந்து, சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டதோடு, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai