சுடச்சுட

    

    பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

    By புதுச்சேரி,  |   Published on : 14th September 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில், பக்ரீத் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
     தியாகத்தை உணர்த்தும் வகையிலும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும் நோக்கத்திலும் இந்த பண்டிகையை, புதுச்சேரியில் உள்ள முஸ்லிம்கள் செவ்வாய்க்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
     இதனையொட்டி புதுச்சேரி ஜும்மா மசூதி, நெல்லித்தோப்பு, முல்லா வீதி, சந்தாசாகிப் தெரு, கோவிந்தசாலை, தவளக்குப்பம், உப்பளம், வானரப்பேட்டை, சுல்தான்பேட்டை, மதினா பள்ளி, புதிய சாரம், முதலியார்பேட்டை 100 அடி சாலை, அரியாங்குப்பம், இந்திரா நகர், காலாப்பட்டு, முஹமதியா, புதிய பேருந்து நிலையம், பெரியகடை, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, பாகூர், ஒதியம்பட்டு, நைனார்மண்டபம், கிருமாம்பாக்கம் பகுதிகளில் உள்ள 30 மசூதிகளிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
     ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இத்தொழுகைகளில் பங்கேற்றனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் ஏழை, எளியோருக்கு குர்பானியும் அளித்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai