சுடச்சுட

  

  திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பொதுக்கழிப்பிட வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
   திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சந்தப்பேட்டையில் தீயணைப்பு நிலையம், கோட்டாட்சியர் அலுவலகம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், சார்நிலை கருவூலம், கிளைச் சிறை, பொதுப்பணித் துறை அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை உள்ளன.
   மேலும், தனியார் மருத்துவமனைகள், தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகள் அதிகளவில் உள்ளன. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் நிறைந்த இப்பகுதிக்கு, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்களின் அத்தியாவசியத் தேவைக்காக தினமும் வந்து செல்கின்றனர்.
   ஆனால், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய இப்பகுதியில் பொதுக்கழிப்பிட வசதி ஏதும் கிடையாது. இதனால், பொதுமக்கள் கடுமையான தவிப்புக்கு உள்ளாகின்றனர்.
   எனவே, இப்பகுதியில் பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai