சுடச்சுட

  

  பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டி முடித்தும் ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படாத கட்டடங்கள்

  By நமது நிருபர்  |   Published on : 14th September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கள்ளக்குறிச்சி அருகேயுள்ள நிறைமதி ஊராட்சியில், தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், சுகாதார வளாகம் ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படாமல் இருப்பதால் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
   கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது நிறைமதி கிராமம். இக் கிராமத்தில் கடந்த 2012-2013ஆம் ஆண்டில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், சமுதாயக்கூடம் மற்றும் ஆண்கள், பெண்கள் கழிவறை, குளியலறை கட்டப்பட்டது.
   இவற்றின் மொத்த மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை அக் கிராமத்தினர் ஆட்சியருக்கு வழங்க வேண்டும். பின்னர், ஆட்சியர் அதற்குரிய முழுத் தொகையை அந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு அனுப்பி வைப்பார்.
   அதன்படி, இந்தக் கிராமத்தில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சமுதாயக் கூடமும், தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தில் ஆண்கள், பெண்கள் கழிவறை கட்டுவதற்கு முடிவு செய்தனர். சமுதாயக்கூடம் கட்டுவதற்கு மூன்றில் ஒரு
   பங்கான ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், கழிவறை கட்டுவதற்கு தலா ரூ.75 ஆயிரமும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர்.
   பின்னர், ஆட்சியர் மொத்தத் தொகையை ஊராட்சி ஒன்றியத்துக்கு திட்ட அலுவலர் மூலம் அனுப்பி வைத்தார்.
   இதன்படி, அக் கிராமத்தில் சமுதாயக்கூடம் மற்றும் கழிவறை கட்டி முடிக்கப்பட்டு இதுவரை ஊராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. இதனால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தற்போது சமுதாய கூடத்துக்கும், கழிவறைக்கும் தனியார் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் க.துரைசாமியிடம் கேட்டபோது, தான் பொறுப்பேற்று 4 மாதங்கள்தான் ஆகின்றன. அதனால், இதுதொடர்பாக எதுவும் தனக்குத் தெரியாது என்றார்.
   இதன் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ஊராட்சிக்கு வருவாயை ஏற்படுத்தித் தருவாரா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai