Enable Javscript for better performance
வடகிழக்கு பருவமழை: வட்டாட்சியர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, திண்டிவனம் வட்டாட்சியர் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
     வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வட்டாட்சியர்(பொ) பரமேஸ்வரி தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர்கள் கவிதா, பாபு, மின்வாரிய இளநிலை பொறியாளர் யுவராஜ், அரசு மருத்துவமனை மருத்துவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர்(பொ)கிருஷ்ணராஜ், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழையின் போது, திண்டிவனம் வட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
     கூட்டத்தில் தீயணைப்பு துறை, பொதுப்பணித் துறை, வட்டார வளர்ச்சித் துறை மற்றும் சுகாதார துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai