சுடச்சுட

  

  அனுமதியின்றி செயல்படும் உறைவிடப் பள்ளிகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

  By திருக்கோவிலூர்,  |   Published on : 15th September 2016 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அனுமதியின்றி செயல்படும் உண்டு, உறைவிடப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற சுமார் 1,500 மாணவ, மாணவிகளுக்காக 17 இடங்களில் உண்டு, உறைவிட சிறப்புப் பயிற்சி மையங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
   இந்த மையங்களில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் பள்ளிகளை நிர்வகிக்கும் தொண்டு நிறுவனங்கள் செய்துதர வேண்டும்.
   இதன் செயல்பாடுகளை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள் தங்களின் நேரடிப் பார்வையில் ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
   ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி அனுமதி வழங்கவேண்டும். இந்தக் கல்வியாண்டு அதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
   இதையடுத்து, மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 சிறப்புப் பயிற்சி மையங்களும், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், தொண்டு நிறுவனங்கள் தங்கள் மையங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
   அனுமதியின்றி மையங்களைச் செயல்படுத்தி வரும் நிறுவனங்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால், இச் சிறப்புப் பயிற்சி மையங்களில் தங்கிப் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
   எனவே, இங்கு தங்கிப் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai