Enable Javscript for better performance
ஆட்சியரகத்தில் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயன்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சியரகத்தில் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயன்றவர் கைது

    By விழுப்புரம்,  |   Published on : 15th September 2016 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டா மாற்றம் செய்யாமல் அலைக்கழித்ததாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
     திருவெண்ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்டூரைச் சேர்ந்தவர் காதர் பாஷா (47). இவர், தனது மனைவி சபீனா (22), தாய் விசாலாட்சி (60), மகள் முலீனா (8), மகன் சதாஉசேன் (7), முரளிதரன் (1) ஆகியோருடன், புதன்கிழமை ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
     மனு கொடுக்க வந்த அவர் திடீரென கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை குடும்பத்தினருடன் உடலில் ஊற்றிக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார்.
     அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அதனைத் தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
     தொடர்ந்து விசாரித்ததில், இவரது தந்தை பெயரில் உள்ள 8 சென்ட் வீட்டுமனை மற்றும் 40 சென்ட் நிலத்தைத் தனது பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்காக, தந்தையின் இறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்ததாகவும், கிராம நிர்வாக அலுவலர் அதனைக் கொடுக்காமல் நீண்ட காலமாக அலைக்கழித்து வருவதாகவும், பட்டா மாற்றம் செய்யாததால், அவரது இடத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், இது குறித்து வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லாததால், ஆட்சியரிடம் முறையிட வந்து, தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார். போலீஸார் அவர்களை கைது செய்து, எச்சரித்து அப்புறப்படுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai