சுடச்சுட

    

    ஆட்சியர் அலுவலகம் அருகே பச்சிளம் குழந்தை மீட்பு

    By விழுப்புரம்,  |   Published on : 15th September 2016 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆதரவற்றுக் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை போலீஸார் புதன்கிழமை மீட்டனர்.
     ஆட்சியர் அலுவலகம் அருகே பெருந்திட்ட வளாகப் பின் பகுதியில், புதர் மண்டிய இடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, அப்பகுதி மக்கள் சிலர் அங்கு சென்ற பார்த்தபோது, ஆண் பச்சிளம் குழந்தை ஆதரவற்றுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
     இது குறித்து உடனடியாக அவர்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விழுப்புரம் மேற்கு காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் போலீஸார் அங்கு விரைந்து வந்து, பச்சிளம் குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தையை வீசிவிட்டுச் சென்றவர்கள் குறித்து, மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai