சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலுக்கு 5,126 வாக்குச்சாவடிகள்: அலுவலர்களுக்குப் பயிற்சி தொடக்கம்

    By  விழுப்புரம்,  |   Published on : 15th September 2016 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தல் - 2016 தொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குப் பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை விழுப்புரத்தில் நடைபெற்றது.
     மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றக் கூட்டத்துக்கு, ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
     உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
     இதற்காக வாக்குச் சாவடி மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
     அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் 4,615 வாக்குச் சாவடிகளும், 15 பேரூராட்சிகளில் 289 வாக்குச் சாவடிகளும், 3 நகராட்சிகளில் 222 வாக்குச் சாவடிகளும் மொத்தம் 5,126 வாக்குச் சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இங்கு, அடிப்படை வசதிகள், தயார்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். இதனையடுத்து, வாக்குச் சாவடிகளின் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார். தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல், வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் நியமனத்தைச் சேகரித்து வழங்குதல், வாக்கு எண்ணிக்கை மையம் கண்டறிதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருள்களைத் தயார் செய்தல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
     மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், திட்ட இயக்குநர் மணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வி.சேகர், ஊராட்சி உதவி இயக்குநர் ராமதாஸ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுசுயா டெய்சி எர்னஸ்ட் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai