Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மனு அளிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மனு அளிக்கலாம்

    By உளுந்தூர்பேட்டை  |   Published on : 15th September 2016 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம் என விழுப்புரம் அதிமுக தெற்கு மாவட்ட செயலர் இரா.குமரகுரு தெரிவித்துள்ளார்.
     இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பாளர்களாகப் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை செப். 16-ஆம் தேதி முதல் 22 வரை கள்ளக்குறிச்சியில் உள்ள விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ரூ. 11,000, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள் ரூ. 5,000, நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் ரூ. 5,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ரூ. 2,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai