Enable Javscript for better performance
எரிக்கப்பட்ட தமிழக வாகனங்களுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    எரிக்கப்பட்ட தமிழக வாகனங்களுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

    By நெய்வேலி  |   Published on : 15th September 2016 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்ட தமிழக வாகனங்களுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
     கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற தமாகா மாவட்டத் தலைவர் ஏ.நெடுஞ்செழியன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியது:
     காவிரி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அமல்படுத்தவிடாமல் தடுக்க வேண்டும் என நினைத்து கர்நாடகாவில் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
     தமிழர்களின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களும் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். கர்நாடக கலவரத்தில் தமிழர்களின் உடைமைகள் ரூ.100 கோடி அளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு கர்நாடக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். கலவரத்துக்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக, தமிழக அரசுகளின் மெத்தனப் போக்கே காரணம்.
     விவசாயிகளின் ஜீவாதார பிரச்னையை தீர்க்கும் வகையில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும். கர்நாடக, தமிழக முதல்வர்களை பிரதமர் மோடி அழைத்துப் பேச வேண்டும். கர்நாடகம், தமிழகம் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். வரும் 16-ம் தேதி தமிழகத்தில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமாகா பங்கேற்கும்.
     உமாபாரதி, சதானந்த கெüடாவின் பேச்சு கர்நாடகத்துக்கு சாதகமாக உள்ளது. அவர்கள் காழ்ப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். பிரதமர் மோடி அவர்களை கண்டிக்க வேண்டும்.
     கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று கர்நாடக முதல்வர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது என்றார் அவர்.
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai