சுடச்சுட

    

    கோவை மாவட்டம், அன்னூரில் ஒருதலைக் காதலால் இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தையல் கலைஞர் சோமு (52). இவரது மனைவி சாரதா      (48). இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக அன்னூர்-தென்னம்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் தன்யா (23). பட்டதாரியான தன்யா பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அன்னூரில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த சகீல் என்பவர் தன்யாவை ஒருதலையாக காதலித்து வந்தாராம்.

    தன்யாவுக்கு அடுத்த மாதம் வேறு ஒருவருடன் அவரது பெற்றோர் திருமணம் நிச்சயித்துள்ளனர். இந்நிலையில், தன்யாவின் பெற்றோர் புதன்கிழமை மாலை மருத்துவமனைக்குச் சென்றனர். இதையறிந்த சகீல் பின்பக்கம் வழியாக தன்யா வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டுத் தப்பினார். இதில், தன்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு தன்யாவின் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பியபோது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் அன்னூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி, கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொலையாளி விட்டுச் சென்ற கத்தியை தன்யா வீட்டில் இருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து தன்யாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த அன்னூர் போலீஸார், இக்கொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் சகீலை தேடி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai