சுடச்சுட

    

    சட்டப்பேரவை நேரத்தை திமுகவினர் வீணடித்து விட்டனர்: தேமுதிக குற்றச்சாட்டு

    By விழுப்புரம்,  |   Published on : 15th September 2016 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் தேமுதிகவின் 12-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     விழுப்புரம் நகரச் செயலர் என்.பாபு வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் எல்.சுப்பிரமணி, எஸ்.நல்லத்தம்பி, ஆர்.குமார், கே.கோவிந்தன், தேசம்செல்வராசு, ஜெயக்குமார், ராமச்சந்திரன், தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     மாவட்ட அவைத் தலைவர் கோவி.முருகன், துணைச் செயலர்கள் வி.புருஷோத்தமன், கணேசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயசீலன், சேகர், பாலாஜி, அருள், மாணவரணிச் செயலர் சுந்தரேசன், வழக்குரைஞரணி முத்துலிங்கம், மகளிரணிச் செயலர் சூடாமணி, தொழிற்சங்கத் தலைவர் சக்திவேல், இளைஞரணித் துணைச் செயலர் ஆதவன்முத்து உள்ளிட்டோர் பேசினர்.
     கூட்டத்தில் கலந்துகொண்டு, மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் பேசியதாவது: தேமுதிகவினர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தபோது, தொகுதி குறைகளைப் பேசி நலத்திட்டங்களைப் பெற்றனர். தற்போதைய சட்டப்பேரவையில் 89 திமுக உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுள்ள அவர்கள், அரசியலுக்காகவே வெளிநடப்பு செய்கின்றனர். இதுவரை எந்தவொரு மக்கள் பிரச்னையையும் பேசியதாகத் தெரியவில்லை. அவர்கள் சட்டப்பேரவை நேரத்தை வீணடித்துவிட்டனர் என்றார். கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai