Enable Javscript for better performance
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் சாவு- Dinamani

சுடச்சுட

    

    டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் சாவு

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 15th September 2016 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தார்.
     மோகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலு மகன் வினோத்குமார் (10). இவர், சடையம்பட்டு ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
     இந்நிலையில் ஊரில் நடைபெற்ற தேர்த் திருவிழாவையொட்டி பள்ளிக்கு விடுமுறை விட்டிருந்தனர். அதனால், அப்பகுதியில் இருந்து வீட்டுக்குச் செல்ல, சாலையில் வந்த டிராக்டரில் ஏறிச் சென்றுள்ளார்.
     மட்டிகைகுறிச்சி பகுதியில் இறங்கிய சிறுவன், டிராக்டரை திருப்பும்போது சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai