சுடச்சுட

    

    தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்

    By புதுச்சேரி,  |   Published on : 15th September 2016 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் தொடரும் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைக் கண்டித்து, புதுச்சேரியில் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பினர் மற்றும் சட்டக் கல்லுôரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் முன் அமர்ந்தும், ரயில் மீது ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     அப்போது, மைசூரில் இருந்து புதுச்சேரிக்கு ஹெளரா விரைவு ரயில் வருவதைக் கண்ட அவர்கள், அந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், கர்நாடக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
     கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால், புதுச்சேரியில் வாழும் கர்நாடக மாநிலத்தவர் மற்றும் அவர்களைச் சார்ந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
     இதனையடுத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai