திருப்பெயர் ஊராட்சித் தலைவரின் உரிமை பறிப்பு: ஆட்சியர் நடவடிக்கை
By விழுப்புரம், | Published on : 15th September 2016 09:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உளுந்தூர்பேட்டையை அடுத்த திருப்பெயர் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் உரிமையைப் பறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருப்பெயர் ஊராட்சியில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே காசோலையில் கையெழுத்திடுவதில் இருந்து வந்த பிரச்னை காரணமாக குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.
இது தொடர்பாக, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுந்தது. மேலும், இருவர் மீதும் பல்வேறு புகார்கள் வந்தன.
இதனை விசாரித்த ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரிடம் இருந்து காசோலையில் கையெழுத்திடும் உரிமையைப் பறித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.