சுடச்சுட

  

  தொண்டி ஆற்றில் பழைமையான தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு

  By செஞ்சி,  |   Published on : 15th September 2016 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2

  வல்லம் ஊராட்சி, மேல்சித்தாமூர் அருகேயுள்ள தொண்டி ஆற்றில் பழைமையான சமண தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
   மேல்சித்தாமூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்சுவநாதர் கோயில் உள்ளது. இங்கு சமண சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் ஜினகஞ்சி மடமும் அமைந்துள்ளது.
   இக்கோயிலின் எதிரே உள்ள தொண்டி ஆற்றின் கிழக்குக் கரைப் பகுதியில் சமண தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
   2 அடி உயரம், ஒன்றரை அடி அகலமுள்ள இந்த புடைப்புச் சிற்பத்தில் தீர்த்தங்கரர் அமர்ந்த நிலையில் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
   இது குறித்து விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ரமேஷ்பாபு கூறுகையில், இப் புடைப்புச் சிற்பம், கி.பி.
   12-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில், தீர்த்தங்கரர் பீடத்தில் அமர்ந்தவாறு உள்ளார். தலைக்கு மேல் முக்குடை காணப்படுகிறது.
   தலையின் பின்புறம் அரைவட்ட வடிவில் பிரபை ஒன்று உள்ளது.
   இது குறித்து மேலும் பல தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது என்றார்.
   ஜினகஞ்சி மடாதிபதி ஸ்ரீலட்சுமிசேனக அடிகளார், திருக்கழுகுன்றம் ஜீவா, புதுச்சேரி அகிம்சை நடை நிறுவனர் ஸ்ரீதர், செஞ்சி ஆர்.குமார் எம்.பி உள்ளிட்டோர் உடனருந்தனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai