சுடச்சுட

    

    புதுச்சேரியில் 251 பேருக்கு டெங்கு பாதிப்பு!

    By நமது நிருபர், புதுச்சேரி  |   Published on : 15th September 2016 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    3

    புதுச்சேரியில், இதுவரை 251 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி உள்ளது.
     நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்திலும் டெங்கு, சிக்குன்குன்யா நோய் பாதிப்பு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
     செப்டம்பர் மாதம் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்திக் காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடுமையாகும் நிலை உள்ளது.
     இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் (பொதுசுகாதாரம்) டாக்டர் ஜி.ரகுநாதன் கூறியதாவது:
     புதுச்சேரியில் இதுவரை 251 பேருக்கு டெங்கு, 14 பேருக்கு சிக்குன்குன்யா நோய் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் துறை, பொதுப்பணி, அறிவியல் தொழில்நுட்பத் துறை, நகரமைப்பு திட்டமிடல் துறை, மாசுக்கட்டுப்பாட்டுத் துறை, பூச்சியியல் கட்டுப்பாட்டுத் துறை, உள்ளிட்ட துறைகள் அடங்கிய மாநில செயல்திட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், கொசுக்கள் ஒழிப்பு தொடர்பாக அந்தந்த துறைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
     பொதுமக்கள் மற்றும் சமுதாய பங்களிப்புடன் பல்வேறு பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏறக்குறைய 1100 மகளிர் சுய உதவிக்குழுக்கள், உள்ளாட்சி துப்புரவு ஊழியர்களுக்கு கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக பயிற்சி தரப்பட்டுள்ளது. மேலும், ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளிலும் காய்ச்சல் பரவியுள்ளதா என வீடு வீடாகவும் ஆய்வு செய்யப்படுகிறது என்றார் ரகுநாதன்.
     கடந்த ஆண்டு கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத கால கட்டத்தில் 43 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். சிக்குன்குன்யா பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை. 2014-ஆம் ஆண்டில் 1408 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்த நிலையில் 2015-ஆம் ஆண்டில் 803 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
     டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் 300 பேர்
     புதுச்சேரியில் டெங்குவை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த வாரம் முதல் 300 பேர் கொசுக்களை கண்டறிந்து ஒழிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் கொசுக்கள் உற்பத்தி ஆகும் இடத்தில் மருந்துகள் தெளிக்கும் பணியை மேற்கொள்வர்.
     கொசு உற்பத்தி இடங்களை கண்டறிந்த பிறகு, நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் மூலம் அவை அழிக்கப்படும். இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக 27 ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் தங்கள் பகுதிகளில் டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
     கழிவுநீர் வடிகால், குளிர்சாதனப் பெட்டி, தேங்காய் ஓடு, பூத்தொட்டி போன்றவை ஏடீஸ் கொசுக்கள் முக்கியமாக உற்பத்தியாகும் இடங்கள். அக்கொசுக்களை ஒழிப்பதற்கு தேவையான மருந்துகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு
     தரப்பட்டுள்ளது.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai