சுடச்சுட

    

    ரிஷிவந்தியத்தில் குரங்குகள் அட்டகாசம்

    By திருக்கோவிலூர்,  |   Published on : 15th September 2016 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரிஷிவந்தியம் பகுதியில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

     ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலையொட்டி உள்ள பகுதியில் சமீபகாலமாக குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வரும் குரங்குகள், பொதுமக்கள் கொண்டு செல்லும் பொருள்களைப் பறித்துக் கொண்டு ஓடுகின்றன. மேலும், அருகிலுள்ள வீடுகளுக்குள் சர்வ சாதாரணமாக நுழையும் குரங்குகள், வீட்டில் உள்ள உணவுப் பொருள்கள், காய்கறி, தானியங்கள், பால், தயிர் என எதையும் விட்டு வைப்பதில்லை.
     இதேபோல் கடை வீதிகளிலும் குரங்குகள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதால் வணிகர்கள் பெரும் பொருள் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் உள்ள கேபிள் வயர்கள் மீது குரங்குகள் தொங்கியும், நடந்தும் செல்வதால் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. இவ்வாறு, பல்வேறு வகைகளில் தொல்லை தரும் குரங்குகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai