சுடச்சுட

  

  விழுப்புரம் பகுதியில் வாழ்கின்ற மலையாள மக்கள், அத்திப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினர்.
   மகாபலி மன்னனின் பெருந்தன்மையை நினைவுபடுத்தும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
   மகாபலி மன்னனின் அகந்தையை அழிக்க அவனை பூமிக்குள் புதைக்கும் முன்பு, அவன் இறைவனிடம் ஆண்டுதோறும் தான் நாட்டு மக்களைக் காண வரும்போது, வரமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக ஐதீகம்.
   அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஆண்டு தோறும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.
   அந்நாளில் மக்கள் தங்கள் இல்லங்களின் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை விருந்துண்டு, நடனங்களை ஆடி மகிழ்கின்றனர்.
   கயிறு இழுத்தல், படகுப் போட்டி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தி உற்சாகமடைகின்றனர். செப். 6-ஆம் தேதி அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாள்கள் இப்பண்டிகை கொண்டாடப்பட்டது.
   அதன்படி, விழுப்புரத்தில் வசிக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai