Enable Javscript for better performance
வீட்டுமனையை அடிப்படை உரிமையாக்க வேண்டும்: கிராமப்புற தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வீட்டுமனையை அடிப்படை உரிமையாக்க வேண்டும்: கிராமப்புற தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

    By விழுப்புரம்,  |   Published on : 15th September 2016 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற கோரிக்கைகள் வலியுறுத்தல் கருத்தரங்கில் வீட்டுமனையை அடிப்படை உரிமையாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
     சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலர் மா.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கலியமூர்த்தி வரவேற்றார். பொதுச் செயலர் எஸ்.ஜானகிராமன், அகில இந்திய துணைத் தலைவர் பாலசுந்தரம், கம்யூனிஸ்ட் (எம்.எல்) கட்சியின் மாநிலச் செயலர் எஸ்.குமாரசாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
     கிராமப்புற மக்களுக்கு அடிப்படைத் தேவையான வீட்டுமனையை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தினருக்கு 5 சென்ட் நிலத்துடன் வீட்டுமனை என்பதைச் சட்டமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, 10 லட்சம் கையெழுத்து பெற்று முதல்வருக்கு அனுப்பி வைத்தல், காவிரி நதிநீர் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும், கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai