சுடச்சுட

    

    அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை

    By திண்டிவனம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி/திருக்கோவிலூர்,  |   Published on : 16th September 2016 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் பேரறிஞர் அண்ணாவின் 108-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அண்ணாவின் உருவச் சிலை மற்றும் படத்துக்கு மலை அணிவித்து மரியாதை செய்தனர்.
     திண்டிவனத்தில்
     நகர திமுக இளைஞரணி சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை இளைஞரணி அமைப்பாளர் தளபதி குமரன் ஏற்பாடு செய்திருந்தார். அண்ணாவின் உருவப் படத்துக்கு மாவட்ட முன்னாள் துணைச் செயலர் கே.அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.ஆர்.எஸ்.ரவி, முரளிதரன், இலக்கிய அணித் தலைவர் சுகுமாறன், தொண்டரணி அமைப்பாளர் ராஜசக்தி, வழக்குரைஞர் அணித் துணை அமைப்பாளர் புஷ்பராஜ், நகர சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளர் சாதிக்பாஷா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     செஞ்சியில்
     விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்ட அண்ணாவின் பிறந்த நாள் விழாவில், அவரது உருவச் சிலைக்கு வடக்கு மாவட்டச் செயலரும் செஞ்சி எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
     முன்னதாக, ஊர்வலமாக வந்த திமுகவினர் பேருந்து நிலையம் எதிரே உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     முன்னாள் எம்.எல்.ஏ., பா.செந்தமிழ்செல்வன், ஒன்றியச் செயலர்கள் செஞ்சி கிழக்கு ஆர்.விஜயகுமார், மேல்மலையனூர் கிழக்கு நெடுஞ்செழியன், வல்லம் வடக்கு அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், செஞ்சி நகரச் செயலர் காஜா நஜீர், வல்லம் தெற்கு மாவட்ட பிரதிநிதி இளம்வழுதி, பேரூராட்சித் துணைத் தலைவர் இ.சங்கர், முன்னாள் துணைத் தலைவர்கள் பார்சுதுரை, மாவட்டப் பொறியாளர் அணித் துணை அமைப்பாளர்கள் கே.எஸ்.எம்.மொக்தியார் அலி, ரசூல்பாஷா, ஆதிதிராவிடர் அணித் துணை அமைப்பாளர் சிங்கம் சேகர் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
     கள்ளக்குறிச்சியில்
     கள்ளக்குறிச்சி நகர, ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு அ.பிரபு எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
     நகரச் செயலர் எம்.பாபு தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் கோ.பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழுத் தலைவர் அ.ராஜசேகர், அவைத் தலைவர் எஸ்.பச்சையாப்பிள்ளை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
     காந்தி சாலையில் உள்ள அதிமுக நகர அலுவலகத்தில் இருந்து கட்சித் தொண்டர்கள் ஊர்வலமாகப் பேருந்து நிலையத்துக்கு வந்து, அங்குள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     முன்னாள் எம்.எல்.ஏ., க.அழகுவேலு பாபு, மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலர் பெ.சீனிவாசன், எம்.ஜி.ஆர். அணி பொருளர் அ.குபேந்திரன், மாணவரணிச் செயலர் கே.சீனுவாசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
     திமுக சார்பில்: இதேபோல் திமுக சார்பில் நடைபெற்ற விழாவில், திமுகவினர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலர் சுப்பராயலு தலைமை வகித்தார். சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., தா.உதயசூரியன், ஒன்றியச் செயலர்கள் சி.வெங்கடாசலம், அரவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
     மாவட்டச் செயலர் ஆ.அங்கையற்கண்ணி தலைமையில் நகர அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்த திமுகவினர் மந்தைவெளி திடலை அடைந்து, அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டப் பொருளர் எம்.கென்னடி, நகரத் துணைச் செயலர் அபுபக்கர், வழக்குரைஞர் செல்வநாயகம் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
     திருக்கோவிலூரில்
     அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
     இதனையொட்டி, திருக்கோவிலூர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா உருவச் சிலை மற்றும் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
     ஒன்றியச் செயலர் ஏ.பி.பழனி, நகரச் செயலர் கே.சுப்பிரமணியன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.இளவரசன், பேரூராட்சி உறுப்பினர்கள் சி.ஆர்.சம்பத், எஸ்.ஜெகன், நகர இளைஞரணி நிர்வாகி எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai