Enable Javscript for better performance
ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறப்பு: கிராம மக்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறப்பு: கிராம மக்கள் முற்றுகை

    By விழுப்புரம்,  |   Published on : 16th September 2016 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மரக்காணம் அருகே மருத்துவரின்றி பிரசவம் நடைபெற்றதால் குழந்தை இறந்ததைக் கண்டித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
     கீழ்ப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, மனைவி சிலம்பரசியும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், சிலம்பரசி இரண்டாவதாக கர்ப்பம் அடைந்தார். அவரை அருகிலுள்ள அனுமந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை சேர்த்துள்ளனர்.
     அங்கு, அவருக்கு வியாழக்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, மருத்துவமனையில் ஒரு செவிலியர் மட்டுமே இருந்ததால், சிலம்பரசிக்கு உடனடியாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
     மருத்துவர்கள் வர காலதாமதம் ஆனதால், செவிலியரே மருத்துவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிலம்பரசிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மருத்துவர்கள் இல்லாமல், செவிலியர் பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்து பிறந்தது என்று கூறி, சிலம்பரசியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு மருத்துவமனையை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தகவலறிந்த மரக்காணம் காவல்துறையினர் விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரச்னைக்கு காரணமான, பணியில் இருக்கவேண்டிய மருத்துவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
     இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதியளித்தனர். இதனையடுத்து, இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுவை பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai