Enable Javscript for better performance
கார் மோதி மாணவி சாவு- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை அருகே சைக்கிள் மீது கார் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தார். மற்றொரு மாணவி காயமடைந்தார்.
     எ.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகள் சத்யா (17), வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகள் சிவசக்தி (17) இருவரும் வெள்ளையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.
     இருவரும் புதன்கிழமை ஒரே சைக்கிளில் வெள்ளையூரிலிருந்து குணமங்கலம் குறுக்குச் சாலை அருகே சென்றபோது, உளுந்தூர்பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற கார், சைக்கிள் மீது மோதியது.
     இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த மாணவிகள் இருவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
     பின்னர் தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மாணவி சத்யா அங்கிருந்து சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வியாழக்கிழமை இறந்தார். மாணவி சிவசக்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
     இது குறித்த புகாரின்பேரில், உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai