சுடச்சுட

  

  கோட்டக்குப்பம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக 5 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
   சின்னமுதலியார் சாவடி அய்யனார் கோயில் பகுதியில் கோட்டக்குப்பம் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
   அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், அப்பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
   இதையடுத்து, சின்னமுதலியார் சாவடியைச் சேர்ந்த சதீஷ் (46), பெரிய முதலியார் சாவடியைச் சேர்ந்த ரிங்கு (35), துருவையைச் சேர்ந்த சிரஞ்சீவி (22), புதுவை வீராம்பட்டினத்தைச் சேர்ந்த பிரிதீவ்ராஜ் (33), வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித் (41) ஆகியோரை கைது செய்த கோட்டக்குப்பம் போலீஸார், அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai