சுடச்சுட

    

    நூறு நாள் வேலைத் திட்டக் கூலியை வழங்கக் கோரி மக்கள் சாலை மறியல்

    By செஞ்சி,  |   Published on : 16th September 2016 11:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நூறு நாள் வேலைத் திட்டத்தில் தங்களுக்கு சேரவேண்டிய பாக்கித் தொகையை வழங்கக் கோரி செஞ்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மொடையூரை சேர்ந்த கிராம மக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
     வல்லம் ஊராட்சி ஒன்றியம், மொடையூர் கிராமத்தில் நடைபெற்று வந்த மத்திய அரசின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 7 மாதங்களாக கூலி வழங்கப்படாமல் பாக்கி உள்ளதாகவும், இது குறித்து ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி மொடையூர் கிராம மக்கள், செஞ்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நாட்டார்மங்கலம் கூட்டுச் சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     தகவலறிந்து வந்த செஞ்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜ், கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
     மத்திய அரசிடமிருந்து பணம் வராததால்தான் பாக்கி உள்ளதாகவும், நிதி வந்ததும் உடனடியாக வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
     இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இவ்வழியாக சென்னை, புதுச்சேரி, செஞ்சி, திருவண்ணாமலை செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai