Enable Javscript for better performance
பொன்முடி மீதான முறைகேடு வழக்குகள்: அக்.6-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொன்முடி மீதான முறைகேடு வழக்குகள்: அக்.6-க்கு ஒத்திவைப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 16th September 2016 11:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் செம்மண் குவாரி முறைகேடு, சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜரானார். இரு வழக்குகளின் விசாரணையை அக்.6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
     செம்மண் குவாரி முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, கெüதமசிகாமணி உள்ளிட்டோர் விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
     இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆஜராகவில்லை. பொன்முடி உள்ளிட்ட 6 பேர் ஆஜராகினர்.
     பொன்முடி உள்ளிட்டோரின் மனு தொடர்பாக, அரசு தரப்பு பதிலுரை வழங்க அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, இறுதி அவகாசம் வழங்கிய நீதிபதி சுந்தரமூர்த்தி விசாரணையை அக்.6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
     சொத்துக் குவிப்பு வழக்கு: மேலும், இதே நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி ஆஜரானார். இந்த வழக்கையும் அக்.6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai