சுடச்சுட

    

    மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசுத் துறையினர் தயாராக இருக்க ஆட்சியர் அறிவுரை

    By விழுப்புரம்,  |   Published on : 16th September 2016 11:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் பேசியதாவது: வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின்போது, பேரிடர்களைச் சமாளிக்க அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்துத் துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் தொலைபேசி எண்கள் அனைத்து அலுவலர்களும் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
     காவல்துறை, தீயணைப்புத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கங்களை, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு செய்து காட்ட வேண்டும்.
     புயல் பாதுகாப்பு இல்லங்கள், பள்ளி கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைப்பதற்கு தயார் படுத்தவேண்டும். மழைக் காலங்களில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     பொதுப்பணித் துறையினர் உடைப்பு மற்றும் வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காக மணல் மூட்டைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர், சாலைகளில் மரங்கள் விழுதல், மின் கம்பங்கள் விழுதல் உள்ளிற்றவற்றை உடனுக்குடன் சரிசெய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நியாய
     விலைக் கடைகளில் போதிய அளவு உணவுப் பொருள்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். டீசல், பெட்ரோல், எரிவாயு சிலிண்டர்களையும் அந்தந்த விற்பனை மையங்களில் போதிய அளவில் இருப்பு உள்ளதா என அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
     குளங்கள், ஏரிகள், குட்டைகள் ஆகியவற்றில் உடைப்பு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
     தொற்று நோய் தடுப்புக்குத் தேவையான மருந்துகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். மருத்துவர்கள் விடுப்பில் செல்லாமல், சுழற்சிமுறையில் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும். அதேபோல் அனைத்துத் துறை அலுவலர்களும் அவசர காலத்தில் விடுப்பில் செல்லாமல் உரிய மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai