சுடச்சுட

    

    முழு அடைப்பு: அரசியல் கட்சியினர், சங்கத்தினர் கூட்டத்தில் முடிவு

    By விழுப்புரம்,  |   Published on : 16th September 2016 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி பிரச்னை தொடர்பாக நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாய, வியாபார சங்கங்கள், அரசியல் கட்சியினர் ஆதரவளித்துள்ளனர்.
     தமிழகத்தில் காவிரி நீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடக அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (செப். 16) முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டத்தில் விவசாய, வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ரகோத்தமன் தலைமை வகித்தார். வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த சங்கர், பிரேம், உணவக உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த சுப்புராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     மாவட்ட திமுக செயலர் பொன்முடி எம்.எல்.ஏ., ராதாமணி எம்.எல்.ஏ., மாவட்டத் துணைச் செயலர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பராஜ், கலிவரதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கலியன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் குலாம்மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் ஆற்றலரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு, முழு அடைப்புக்கு ஆதரவளித்துப் பேசினர்.
     கூட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ., பேசியதாவது: தமிழகத்தில் விவசாய, வியாபார சங்கங்களின் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவளித்துள்ளன. மாவட்டத்தில் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம். காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காணவும், தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், நடைபெறும் இந்தப் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்றார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai