சுடச்சுட

    

    ரயில்வே பணி: தாற்காலிக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

    By உளுந்தூர்பேட்டை  |   Published on : 16th September 2016 11:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை அருகே தாற்காலிக ரயில்வே பணியாளர்கள் திடீரென வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     பரிக்கல் - திருவெண்ணெய்நல்லூர் இடையேயான இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த வெளிமாநில ஊழியர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர்.
     இந்நிலையில், இவர்களுக்கு கடந்த 45 நாள்களாக சம்பளம் வழங்கப்படவில்லையாம். இது குறித்து ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனாலும் நடவடிக்கை இல்லாததால் விரக்தியடைந்த தாற்காலிக ஊழியர்கள் வியாழக்கிழமை திடீரென வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தகவலறிந்த திருநாவலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தாற்காலிக ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடர்ந்ததால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai