Enable Javscript for better performance
ரூ. 1.88 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம்: எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 1.88 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம்: எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 16th September 2016 11:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், கூடுதல் வகுப்பறைக் கட்டடம், ஆய்வகம், கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 1 கோடியே 88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை அ.பிரபு எம்.எல்.ஏ., வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
     பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
     திட்டக்குழு உறுப்பினர் வெ.அய்யப்பா, முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி.மணியன், தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சி.சண்முக சுந்தரம் வரவேற்றார்.
     இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அ.பிரபு எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து, பணியைத் தொடக்கி வைத்தார்.
     விருகாவூர் அரசுப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஜான்பாஷா, கவுன்சிலர் மூர்த்தி, குமரவேலு மற்றும் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai