சுடச்சுட

  

  விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுடன் ஐஜி ஆலோசனை

  By விழுப்புரம்,  |   Published on : 16th September 2016 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் ஐ.ஜி. நேரில் ஆலோசனை நடத்தினார்.
   கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன.
   இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள போலீஸாருக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பேரில், வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன் வியாழக்கிழமை காலை விழுப்புரம் வந்தார்.
   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் சரக டிஐஜி அனிசாஉசேன், எஸ்.பி.க்கள் கே.எஸ்.நரேந்திரன் நாயர் (விழுப்புரம்), விஜயகுமார் (கடலூர்) ஆகியோர் பங்கேற்றனர்.
   இரு மாவட்டங்களில் முழு அடைப்பையொட்டி அசாம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு வழங்கவும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க அரசுப் பேருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும் ஐஜி ஆலோசனை வழங்கினார்.
   இதையடுத்து திண்டிவனம் சென்ற ஐஜி செந்தாமரைக்கண்ணன் அங்கிருந்து விக்கிரவாண்டி, கோலியனூர், விழுப்புரம் வழியாக நெடுஞ்சாலைப் பகுதியில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு வந்தார்.
   பாமக சார்பில், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி, திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனூர் பகுதிகளில் உள்ள நினைவுத் தூண் பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பு குறித்து, ஐஜி ஆய்வு மேற்கொண்டார்.
   உள்ளாட்சித் தேர்தல் வருவதையொட்டியும், இரு மாவட்ட போலீஸாருக்கும், பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளையும் ஐஜி வழங்கினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai