சுடச்சுட

  

  விழுப்புரம் நகர திமுக செயலர் கொலை வழக்கில் மூவர் சிக்கினர்

  By விழுப்புரம்,  |   Published on : 16th September 2016 11:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரத்தில் திமுக நகரச் செயலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
   விழுப்புரம் நகர திமுக செயலர் செல்வராஜ் (45) புதன்கிழமை காலை ரயில்வே குடியிருப்புப் பகுதியில் நடைப்பயிற்சிக்குச் சென்ற போது, 5 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
   இந்தக் கும்பலைப் பிடிக்க டிஎஸ்பி வீமராஜ் தலைமையில், 2 ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் கொண்ட 6 தனிப்படை அமைக்கப்பட்டது.
   இந்த நிலையில், கொலை கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விழுப்புரம் பாணாம்பட்டு பாதையைச் சேர்ந்தவரைப் பிடித்து வந்து போலீஸார் விசாரித்தனர்.
   விழுப்புரம் கல்லூரி சாலையைச் சேர்ந்த ரௌடி இருசப்பன் கூறியதன் பேரில், கூலிப்படையைச் சேர்ந்த கும்பல் செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் தங்கியிருந்ததும், புதன்கிழமை அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பியதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
   மேலும், இருசப்பனின் ஆதரவாளரான விழுப்புரம் கல்லூரி சாலையைச் சேர்ந்த அப்பு, பாணாம்பட்டு பாதையைச் சேர்ந்த அசார் ஆகியோரை தனிப்படை போலீஸார் பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   கீழ்ப்பெரும்பாக்கம் ரௌடி அறிவழகனுக்கு ஆதரவாக பண உதவி செய்து செயல்பட்டதால், செல்வராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், அறிவழகன் மீது முன்விரோதமுள்ள, கடந்தாண்டு கொலையான ரௌடி பத்தர்செல்வத்தின் ஆதரவாளர்கள், இருசப்பனின் ஆதரவாளர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
   இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி. நரேந்திரன நாயரிடம் கேட்டபோது, இந்தக் கொலை தொடர்பாக, 6 தனிப்படைகள் அமைத்து எதிரிகளைத் தேடி வருகிறோம். எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவரை பிடித்து விசாரித்து வருகிறோம். இதில் உள்ளூர்காரர்கள் 2 பேர் உள்பட 8 பேர் வரை ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai