சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் விருப்ப மனு

  By DIN  |   Published on : 17th September 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
  வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.லட்சுமணன் எம்.பி., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வி.சண்முகம் மனுவைப் பெறும் பணியைத் தொடங்கி வைத்தார்.
  விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன், நகரச் செயலர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணிச் செயலர் ஆர்.பசுபதி, ஒன்றியச் செயலர் முருகன், இலக்கிய அணிச் செயலர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
  கட்சி அலுவலகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு விருப்பமனுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இங்கு, வடக்கு மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கு உள்பட்ட 248 ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 6 பேரூராட்சிகளுக்கு உள்பட்ட 99 பேரூராட்சி உறுப்பினர்கள், 2 நகராட்சிக்கு உள்பட்ட 75 வார்டு உறுப்பினர்கள், 25 மாவட்டக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
  மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 11 ஆயிரமும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 5 ஆயிரம், நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட ரூ. 5 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 2 ஆயிரம் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தி விண்ணப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம். கட்சியினர் ஆர்வத்துடன் மனுக்களை வாங்கி, பூர்த்தி செய்து அளித்தனர்.
  கள்ளக்குறிச்சியில்: இதேபோல் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் அளிக்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி சேலம் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தொடங்கியது.
  விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், முகையூர், திருக்கோவிலூர், மணம்பூண்டி, தியாகதுருகம், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர், கல்வராயன் மலை (தெற்கு), கல்வராயன் மலை (வடக்கு) உள்ளிட்ட 12 ஒன்றியங்கள், ஒரு நகராட்சி, 9 பேருராட்சிகளில் உள்ள கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட அதிமுகவினர் விருப்ப மனுக்களை வழங்கினர்.
  நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலர் இரா.குமரகுரு தலைமை வகித்தார். தேர்தல் பொறுப்பாளரும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலருமான ஜி.ராமச்சந்திரன் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
  முன்னாள் அமைச்சர் ப.மோகன், அ.பிரபு எம்.எல்.ஏ., விவசாயப் பிரிவு மாவட்டச் செயலாளர் கதிர்.தண்டபாணி, ஒன்றிய செயலர்கள் அ.ராஜசேகர், ப.ராஜேந்திரன், வெ.அயயப்பா, நகர்மன்ற உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன், நகரச் செயலாளர் எம்.பாபு உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai