சுடச்சுட

    

    திண்டிவனத்தில் வங்கி ஏடிஎம் மையத்தில் கல்வீசித் தாக்குதல் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    காவிரி நீர் பிரச்னை தொடர்பாக திண்டிவனத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.  அவர்களை திண்டிவனம் போலீஸார் கைது செய்து, பேருந்தில் அழைத்துச் சென்றனர். லட்சுமி விலாஸ் வங்கி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்க இறக்கியபோது, அக்கட்சியினர் சிலர், அங்கு திறந்திருந்த வங்கியை மூடுமாறு எச்சரித்துள்ளனர்.
     மேலும், ஏடிஎம் மையத்தையும் மூடவேண்டும் என்று கூறி கல் வீசி தாக்கியுள்ளனர்.
    இதில், ஏடிஎம் மையத்தின் கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்து, வங்கிக்  கிளை மேலாளர் மகேஷ்குமார் திண்டிவனம் போலீஸில் புகார் அளித்தார்.
    இதன் பேரில், கீழ்எடையாளம் பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மயிலம் தொகுதிச் செயலர் செல்வசீமான் (38), திண்டிவனம் கிடங்கல் பாஸ்கர் (35), ரோஷணை பாட்டை முகிலன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  எழிலரசன் என்பவரை போலீஸார் தேடி
    வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai