சுடச்சுட

  

  காவிரி பிரச்னையில் தமிழக அரசின் சட்டரீதியான நடவடிக்கை வரவேற்கத்தக்கது

  By DIN  |   Published on : 17th September 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி நீர் பிரச்னையில், தமிழக அரசின் சட்டரீதியான நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
  விழுப்புரத்தில் நடைபெற்ற அந்தக் கட்சியின் மறைந்த தலைவரான சுரேஷ்மோகன் படத்திறப்பு நிகழ்வில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
  காவிரி நீர் பிரச்னைக்கான மோதல், பதற்ற நிலைக்கு, மத்திய அரசின் தவறான அணுகுமுறையே அடிப்படைக் காரணம். இப்பிரச்னைக்குத் தீர்வுகாண காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
  தமிழக அரசும், இதனை பொதுப் பிரச்னையாகக் கொண்டு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக அரசின் தொடர் நீதிமன்ற நடவடிக்கையால்தான் காவிரி நீர் கிடைத்து வருகிறது. அரசின் இந்த சட்டரீதியான நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
  நாட்டின் பொதுவான மத்திய அமைச்சராக இருந்துகொண்டு, காவிரி பிரச்னையில் ஒருசார்பாக பேசும் சதானந்த கௌடாவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
  இங்குள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், மத்திய அரசுக்கும் காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை என்று பொறுப்பற்று பேசுகிறார். கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் சொத்துகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.
  பிரச்னைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, வரும் செப்.28-ல் இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம் நடத்துகிறது. சென்னையில் காவிரி நீர் பிரச்னை தொடர்பான போராட்டத்தின்போது தீக்குளித்த இளைஞர் விக்னேஷ், உயிரிழந்தது வருந்தத்தக்கது. போராட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார். மாவட்டச் செயலர் ஏவி.சரவணன், கலியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai