Enable Javscript for better performance
செஞ்சிக்கோட்டை குகையில் இளைஞர் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சிக்கோட்டை மலையடிவார குகையில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
    செஞ்சி, கொத்தமங்கலம் சாலையில் உள்ள ராணிக்கோட்டை பின்புறம் உள்ள தண்ணீர் சுனை குகையில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், சடலமாகக் கிடந்தவர் கொத்தமங்கலம் சாலையில் வசிக்கும் மாரிமுத்து மகன் முருகன் (19) என்பதும், அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவர், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் காணாமல் போனதும் தெரிய வந்தது.
    குகைப் பகுதியில் வந்து அவர் இறந்தது எப்படி? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு அங்கு வீசப்பட்டாரா? என செஞ்சிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai