சுடச்சுட

    

    தியாகதுருகம் அருகேயுள்ள ராயபுரம் கிராமத்தில் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் தகராறில் தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
    ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராயப்பன் மகன்கள் ரத்தினசாமி (55), அருளப்பன் (50).  சகோதரர் இருவருக்கும் பொதுவான கிணறு உள்ளது. அதிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    இந்நிலையில் கடந்த 2.6.2012 அன்று மாலை அருளப்பனும் அவரது மனைவியும் அவர்களது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, ரத்தினசாமியும் அவரது மனைவி சூசைமரி (53), மகன் அந்தோணிசாமி (25), அவரது மனைவி கார்மேல்மேரி ஆகியோரும் மின் மோட்டார் சுவிட்சை நிறுத்தியுள்ளனர். இதனைத் தட்டிக் கேட்ட அருளப்பனை மண்வெட்டியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
    இது குறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  4 பேரையும் கைது செய்தனர்.  இந்த வழக்கு கள்ளக்குறிச்சி 3-ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
     அதில் ரத்தினசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். சூசைமரி, அந்தோணிசாமி, கார்மேல்மேரி ஆகிய மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai