சுடச்சுட

  

  விழுப்புரத்தில் திமுக நகரச் செயலர் கொலையான சம்பவத்தில் மேலும் 5 பேரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). திமுக நகரச் செயலர். இவர் புதன்கிழமை காலை, விழுப்புரம் ரயில்வே மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, பைக்கில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
  இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர். விழுப்புரம் டி.எஸ்.பி. வீமராஜ் தலைமையில், 6 தனிப்படை போலீஸார், கொலைக் கும்பலைத் தேடி வருகின்றனர்.
  இச் சம்பவத்தில், கொலைக் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விழுப்புரம் பாணாம்பட்டு பாதையைச் சேர்ந்த தேவேந்திரபாண்டியை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
  சிறையில் உள்ள ரௌடி இருசப்பன் கூறியதன்பேரில், கூலிப்படை கும்பலை இரு தினங்கள் அவர் வீட்டில் தங்க வைத்ததும், அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பியதும் தெரிய வந்ததாம்.
  கொலை சம்பவத்தின்போது, உடனிருந்த முக்கிய நபர்களான இருசப்பனின் ஆதரவாளர்கள் அப்பு, அசார் ஆகியோரையும் போலீஸார் வியாழக்கிழமை பிடித்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கூலிப்படை கும்பலான கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 5 பேரை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை பிடித்துள்ளனர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இக்கொலை சதித்திட்டத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai