சுடச்சுட

    

    ரூ. 100 கோடி அளவில் இந்தியன் வங்கி கடன் மேளா: விழுப்புரத்தில் இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 17th September 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் இந்தியன் வங்கிக் கிளை சார்பில் 2 நாள்கள் நடைபெறும் கடன் திட்ட முகாமில் ரூ. 100 கோடி அளவில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது.
    இது குறித்து, விழுப்புரம் இந்தியன் வங்கிக் கிளை சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வங்கியின் புதுவை மண்டல மேலாளர் தேவராஜ் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில், முதன்மை வங்கியான இந்தியன் வங்கி பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு என்று பிரத்யேக கிளைகள் விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களும், சமூக பாதுகாப்பு திட்டங்களும், சிறு குறு தொழில் முனைவோருக்கான முத்ரா உள்ளிட்ட கடன் திட்டங்கள் வங்கி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப். 17, 18) ஆகிய இரு தினங்கள், விழுப்புரம் இந்தியன் வங்கி பிரதான கிளையில், மாபெறும் கடன் மேளா நடைபெற உள்ளது.
    இந்த மேளாவில் வீட்டுக்கடன், தொழிற்கடன், சுயதொழிற்கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளன. கடன் பெறுதவற்கான ஆலோசனையும் வழங்கப்படும். இந்த மேளாவில் அனைத்து வங்கிக் கிளைகளும் இணைந்து சுமார் ரூ. 100 கோடி அளவில் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    எனவே, வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் வேண்டும் என்றார்.
    மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், இந்தியன் வங்கிக் கிளை மேலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai