சுடச்சுட

    

    விழுப்புரம் அருகே நெடுஞ்சாலை சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது.
    பெரம்பலூரில் இருந்து புதுச்சேரிக்கு டயர்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு புறப்பட்டது. விழுப்புரம் அருகே ஜானகிபுரம் புறவழிச்சாலைச் சந்திப்பு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லாரி, தாறுமாறாக ஓடியது.
    அப்போது, விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த சரக்கு லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில், சரக்கு லாரியின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும், கட்டுப்பாடின்றி ஓடிய கன்டெய்னர் லாரி சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.
    இந்த விபத்தில், சரக்கு லாரி ஒட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai