சுடச்சுட

  

  கள்ளக்குறிச்சியை அடுத்த கூகையூர் சாலையில் சுமார் (30) வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலத்தை போலீஸார் சனிக்கிழமை கண்டெடுத்தனர்.
  கீழ்க்குப்பம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தோட்டப்பாடியில் வயல்வெளிப் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடந்தது. இது குறித்து தோட்டப்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாலன் கொடுத்த புகாரின்பேரில், கீழ்க்குப்பம் போலீஸார் அங்கு வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அவரது கையில் எஸ்.எஸ்.பிரியா என்று பச்சை குத்தி இருந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
  கார் மோதி இளைஞர் சாவு
  உளுந்தூர்பேட்டை, செப். 17: அரசூர் அருகே சாலைக் கடக்க முயன்ற இளைஞர் மீது கார் மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
  அயன்வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் விமல்ராஜ் (27), இவர், செப். 14-ஆம் தேதி, தனது சகோதரி வீட்டுக்குச் சென்று, அங்கிருந்து தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அரசூர் பகுதியில் சாலைக் கடக்க முயன்றபோது, திருச்சியிலிருந்து சென்னையை நோக்கிச் சென்ற கார் விமல்ராஜ் மீது மோதியது. இதில் காயமடைந்த விமல்ராஜை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
  இது குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
  பைக் மோதி ஒருவர் சாவு
  விழுப்புரம், செப். 17: கண்டமங்கலத்தில் பைக் மோதிய விபத்தில் பேருந்துக்கு காத்திருந்தவர் உயிரிழந்தார்.
  புதுவை மாநிலம், பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு (48). இவர், வெள்ளிக்கிழமை இரவு, கண்டமங்கலம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக சாலையோரம் நின்றிருந்தபோது, புதுவையிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த பைக், அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த ராமுவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்தார். இது குறித்து, அவர் மனைவி பிரேமா (38) கொடுத்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கார் மோதி விவசாயி சாவு
  விழுப்புரம், செப். 17: கூட்டேரிப்பட்டு சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்ற விவசாயி கார் மோதிய விபத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
  மயிலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (48). இவர், தனது நண்பரான கூட்டேரிப்பட்டைச் சேர்ந்த செல்வபந்துவுடன் (45), பைக்கில் வெளியூர் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கூட்டேரிப்பட்டு சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து, விழுப்புரம் நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது.
  விபத்தில், பொன்னுரங்கம் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த செல்வபந்து காயமடைந்தார்.
  மேலும் விபத்தை ஏற்படுத்திய கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த ரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்த பிச்சமுத்து (45) மீது மோதியதில் அவர் காயமடைந்தார். காயமடைந்த இருவரும் முண்டிம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai