சுடச்சுட

    

    இந்தியன் வங்கி சார்பில் சிறப்புக் கடன் வழங்கும் முகாம் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
    விழுப்புரத்தில் இந்தியன் வங்கியின் பிரதான கிளையில் நடைபெற்ற முகாமில் சென்னை பொது மேலாளர் பங்கேற்று, கடன் திட்டத்தைத் தேர்வு செய்த 61 பேருக்கு, ரூ. 5.48 கோடி மதிப்பில் கடன் வழங்கும் ஆணையை வழங்கினார். புதுச்சேரி மண்டல மேலாளர் தேவராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், கிளை மேலாளர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதே போல், திண்டிவனம் கிளையில் நடந்த முகாமில் ரூ. 5.23 கோடியும், செஞ்சி கிளையில் நடந்த முகாமில் ரூ. 73 லட்சமும் கடன்கள் வழங்கப்பட்டன.
    கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கிக் கிளை சார்பில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் அதன் பொது மேலாளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்து 202 பேர்களுக்கு 14.68 கோடி மதிப்புள்ள வீட்டுக்கடன், வாகனக்கடன், அடமானக் கடன், விவசாயக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கினார்.
    மொத்தம் ரூ. 26.14 கோடி கடன்கள் வழங்கப்பட்டன. கடன் வழங்கும் முகாம் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் (செப். 18) நடைபெறுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai