Enable Javscript for better performance
பகுதிநேர நூலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை வட்டம், உ.நெமிலி ஊராட்சிக்குள்பட்ட உ.செல்லூர் கிராமத்தில் தமிழக அரசின் பொது நூலகத்துறையின் கீழ் இயங்கும் பகுதிநேர நூலகத்தின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    ஊராட்சித் தலைவர் எம்.செந்தில் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.முருகன் வரவேற்றார். நூலகத்துக்கு புரவலர்களாக இணைந்த பலர் தலா ரூ. 1,000 வழங்கினர்.
    ஆசிரியர்கள் வேலா.கந்தசாமி, க.குமரன், விஜய்சிங் ராஜா ஆகியோர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
    நூலகர்கள் சா.விஜயா, வெ.சிவக்குமார், இரா.பாரதிதாசன், ஜெ.செல்வதுரை ஆகியோர்கள் வாசிப்புப் பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். ஆர்.வீரன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai