Enable Javscript for better performance
மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு

    By DIN  |   Published on : 18th September 2016 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் மழை பாதிப்புள்ள பகுதிகளில் ஆய்வு செய்து, உடனே சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டார்.
    வடகிழக்கு பருவ மழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடை
    பெற்றது. இதில், மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்துப் பேசியது:
    பருவமழை பாதிப்புகளைத் தடுப்பதற்கு, அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க உரிய இடங்களைத் தேர்வு செய்து வைக்க வேண்டும்.கடந்த மழையின்போது பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. கடந்தாண்டு சில இடங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழை வெள்ள காலங்களில் நீர் அடைப்பு ஏற்படும் புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றார்.
    ஆட்சியர் எல்.சுப்ரமணியன் பேசியது: பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஊரக வேலைத் திட்டம் மூலம் நீர்வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் மழை பாதிக்கும் 36 கிராமங்களும், 19 கடலோர மீனவ கிராமங்களிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
    எம்.பி.க்கள் இரா.லட்சுமணன், க.காமராஜ், எம்.எல்.ஏ. அ.பிரபு, காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், உதவி ஆட்சியர் ஸ்ரீதர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனுசுயா தேவி, திட்ட இயக்குநர் மணி, கோட்டாட்சியர்கள் ஜீனத்பானு, செந்தாமரை, சண்முகநாதன், ஊராட்சிக்குழுத் தலைவர் அலமேலுவேலு, ஊராட்சி உதவி இயக்குநர் ராமதாஸ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai