சுடச்சுட

  

  வானூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பாஜகவினர் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை சனிக்கிழமை கொண்டாடினர்.
  வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு, பாஜக மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமை வகித்தார். மீனவரணி மாவட்டத் தலைவர் மஞ்சினி, செல்வகணேசன், ஒன்றியச் செயலர் கார்த்தி, பொதுச் செயலர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
  இதேபோல் பொம்மையார்பாளையத்தில் நடைபெற்ற விழாவில், வானூர் ஒன்றியச் செயலர் சிவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விநாயகம் இனிப்புகள் வழங்கினார். ஒன்றியத் துணைத் தலைவர் காத்தவராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  கீழ்ப்புத்துப்பட்டில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், மரக்காணம் ஒன்றியத் துணைத் தலைவர் மணிகண்டன் தலைமையில் இனிப்பு வழங்கினர். கிளியனூரில் மாவட்டச் செயலாளர் கோதண்டபாணி தலைமையில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, சதீஷ், பன்னீர் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
  திண்டிவனத்தில்...
  இதேபோல் திண்டிவனம் நகர பாஜகவினர் சார்பில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு, நகரத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் வினோத், தர்மலிங்கம், துணைத் தலைவர் ஏழுமலை, வழக்குரைஞர் அணி மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
  பாஜக நிர்வாகிகள் சந்திரன், ரங்கசாமி, முருகதாஸ், லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai