சுடச்சுட

    

    அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

    By கள்ளக்குறிச்சி/திருக்கோவிலூர்/செஞ்சி/திண்டிவனம்,  |   Published on : 19th September 2016 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
     விழுப்புரம் தெற்கு மாவட்ட நகர அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, நகரச் செயலர் எம்.பாபு தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் அ.ராஜசேகர், அவைத் தலைவர் எஸ்.பச்சையாப்பிள்ளை, மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலர் பெ.சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலரும் நகர்மன்றத் தலைவருமான கோ.பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிப் பொருளர் அ.குபேந்திரன், செயலர் பி.தங்கபாண்டியன் தொடக்கவுரையாற்றினர்.
     இதில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்டச் செயலர் இரா.குமரகுரு, தலைமைக் கழகப் பேச்சாளர் தாம்பரம் சல்மான், க.காமராஜ் எம்.பி., அ.பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட மகளிரணித் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான க.அழகுவேலு பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
     கூட்டத்தில், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சித் தொண்டர்கள் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, ஒருங்கிணைந்து பாடுபட்டு வெற்றிபெற வைக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுக் கொண்டார்.
     நகரத் துணைச் செயலர் வி.புண்ணியமூர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் இ.செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
     திருக்கோவிலூரில்...
     மணம்பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் விளந்தை கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் பழனியப்பா (எ) டி.எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தார். ஒன்றியத் துணைச் செயலர் கழுமரம் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் துரைராஜ் வரவேற்றார்.
     பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் காஞ்சி பாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
     நகரச் செயலர்கள் சி.எஸ்.செந்தில், ஒன்றிய நிர்வாகிகள் மகாராஜன், தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     இதேபோல் ரிஷிவந்தியம் ஒன்றிய அதிமுக சார்பில் பகண்டை கூட்டுச் சாலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் ச.அருணகிரி தலைமை வகித்தார். விவசாயப் பிரிவு மாவட்டச் செயலர் கதிர்.தண்டபாணி, மகளிரணி மாவட்டச் செயலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டப் பொருளர் எஸ்.கே.சந்திரசேகரன் வரவேற்றார். கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் மாறன் கலந்துகொண்டு, அண்ணா கடந்து வந்த பாதைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
     ஒன்றியக் குழுத் தலைவர் என்.வேலுமயில், ஒன்றியத் துணைச் செயலர் அன்பரசன், கூட்டுறவு வங்கி இயக்குநர் சின்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     செஞ்சியில்...
     செஞ்சி ஒன்றிய அதிமுக சார்பில் அப்பம்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு, செஞ்சி ஒன்றிய அதிமுக செயலர் அ.கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
     மாவட்ட மருத்துவரணிச் செயலர் கே.ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் க.சோழன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் வி.தேவராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்
     லட்சுமிசேகர் ஆகியோர்
     முன்னிலை வகித்தனர்.
     தலைமைக் கழகப் பேச்சாளர் ஜெயகோவிந்தன் கலந்துகொண்டு அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, அரசியல் போராட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
     மாவட்ட பாசறைச் செயலர் லட்சுமிகாந்தன், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலர் ஜெயபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     திண்டிவனத்தில்...
     ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் சாரம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலர் எஸ்.பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளர் என்.ஜெகஜோதி வரவேற்றார். ஒன்றிய விவசாய அணித் தலைவர் பி.அய்யனாரப்பன், ஒன்றிய பிரதிநிதி ராமதாஸ் ஆகியோர் பேசினர். தலைமைக் கழகப் பேச்சாளர் பாவலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
     மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் எஸ்.பி.கஜேந்திரன், பேரவைத் துணைச் செயலர் அன்பழகன், கிளைச் செயலர்கள் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai